தேனி மருத்துவக் கல்லுாரி உதவிப்பேராசிரியருக்கு சிறந்த டாக்டர் விருது

தேனி மருத்துவக் கல்லுாரி உதவிப்பேராசிரியருக்கு  சிறந்த டாக்டர் விருது
X

சிறந்த மருத்துவருக்கான விருது பெறும் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உதவிப்பேராசிரியர் டாக்டர் மு.காமராஜன்.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் உதவிப்பேராசிரியர் டாக்டர் மு.காமராஜனுக்கு சிறந்த டாக்டருக்கான விருதினை கலெக்டர் முரளீதரன் வழங்கினார்.

உலக டாக்டர் தினமான இன்று முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களுக்கு சேவை செய்த டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உதவிப்பேராசிரியர் டாக்டர் மு.காமராஜன், எம்.டி. டி.எம்.,(நெப்ராலஜி), தேனி கிருஷ்ணம்மாள் மருத்துவமனை டாக்டர் ஜெகன் ஆகியோருக்கு கலெக்டர் முரளீதரன் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதினையும், சான்றிதழையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ இணை இயக்குனர் பரிமளாசெல்வி, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் பொன்னாங்கன், மாவட்ட புலனாய்வு அலுவலர் பரமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா