தேனி நகராட்சி தலைவர் பதவி விவகாரம்: திங்கள்கிழமை முடிவு தெரியும் என தகவல்
தேனி நகராட்சி தி.மு.க., தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன்.
தேனி நகராட்சி தலைவர் பதவி தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க நகர செயலாளர் பாலமுருகன் அதிரடியாக தனது மனைவி ரேணுப்பிரியா பாலமுருகனை நிறுத்தி அந்த பதவியை கைப்பற்றினார். தலைமையின் அறிவிப்பிற்கு மாறாக பதவியேற்றவர்கள் விலக வேண்டும் என கட்சித்தலைமை வலியுறுத்தியது. இதனை ஏற்க தேனி மாவட்ட தி.மு.க. மறுத்து, தலைமையிடம் மன்றாடி வருகிறது.
இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்., கட்சிக்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் காங்., கட்சி தி.மு.க.,விற்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்ற நினைக்கத்தோன்றும் நிலை வந்து விட்டது.
இதனால் சென்னையில் கட்சி நிர்வாகிகளிடம் இது தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தையின் வீரியம் சற்று குறைந்துள்ளது. தவிர காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் சற்குணம் மற்றும் அவரது மகன் டாக்டர் தியாகராஜன் பற்றிய முழு விவரங்களையும், அவர்கன் அதிமுக விசுவாசிகள் என்பதையும் திமுக தலைமை மேலிடத்திற்கு தகவல் கொடுத்து விட்டது.
இதனை அறிந்த மேலிடம் தேனி நகராட்சி திமுக தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒதுக்கப்பட்டது. தேனி கவுன்சிலர் சற்குணத்திற்கு ஒதுக்கப்படவில்லை. எனவே வேறு ஒரு நல்ல வேட்பாளரை தாருங்கள் என கேட்டது. ஆனால் வேறு பெண் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியில் தேனியில் இல்லை. இதனால் தலைமையின் முடிவு மாற வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. நகராட்சி தலைவர் பதவியை திமுக வே எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அப்படியானால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. இது பற்றி அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழுவினர் சென்னை அறிவாலயத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திங்கள் கிழமை இப்பிரச்னையில் ஒரு தெளிவான தீர்வு கிடைக்கும், கட்சிமேலிடம் இது பற்றி அறிவிப்பு வெளியிடும் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu