தேனி கிட்னி சென்டரில் முப்பெரும் விழா
தேனி கிட்னி சென்டரில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற வி.ஐ.பி.,க்களுக்கு டாக்டர் மு.காமராஜன் நினைவுப்பரிசு வழங்கினார்.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு தேனி கிட்னி சென்டர் மருத்துவமனையும், தேனி வைகை அரிமா சங்கமும் இணைந்து முப்பெரும் விழாவினை நடத்தின. தேனி கிட்னி சென்டர் மருத்துவமனை வளாகத்தில், நடந்த இந்த விழாவில் தேனிமேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம் நாடார், தேனி சங்கத்தமிழ் அறக்கட்டளை பொருளாளர் பெ.சிவக்குமார், பசுமைத்தேனியின் ஒருங்கிணைப்பாளர் சர்ச்சில்துரை, வெளிச்சம் அறக்கட்டளை நிறுவன தலைவர் சிதம்பரம், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் உட்பட பலர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் மு.காமராஜன் எம்.டி., டி.எம்(நெப்ராலஜி) எழுதிய டயாலைசிஸ்-க்கு பின்பும் வாழ்க்கை இருக்கிறது என்ற புத்தகத்தை தேனி வைகை அரிமா சங்க செயலாளர் ஆடிட்டர் ஜெகதீஷ் வெளியிட்டார். வைகை அரிமா சங்க பொருளாளர் சரவணராஜா புத்தகத்தை பெற்றுக்கொண்டார். தேனி வையை தமிழ்சங்க நிறுவனர் புலவர் இளங்குமரன் புத்தகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினார்.
தேனி வைகை அரிமா சங்க முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். பசிப்பிணி போக்குதல் திட்டத்தின் மாவட்ட தலைவர் பெஸ்ட் ரவி, முதல் துணைத்தலைவர் ராஜேஷ் கண்ணன், இரண்டாம் துணைத்தலைவர் ஜெயம்சரவணன், இயக்குனர் ஜெகன் சாதனை மகளிர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.தேனி நகர்ப்புற சுகாதார மைய செவிலியர்கள் ஜெயபாக்கிய பாத்திமாமேரி, சுகுமாரி, சமூக சேவகிகள் சிவதுர்கா, சக்திவேல்சுவேதா, சடேஷ்வரி, ஓடைப்பட்டி மூதாட்டி ஜக்கம்மாள் ஆகியோர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu