தேனியில் பதினெட்டு இடங்களில் சிக்னல் இல்லாத ரோடு சந்திப்புகள்
பைல் படம்
தேனியில் பதினெட்டு இடங்களில் மிகவும் அபாயகரமான சிக்னல் இல்லாத ரோடு சந்திப்புகள் உள்ளன. இங்கு சிக்னல் போடவும் பணம் இல்லை. போலீசாரை நிறுத்தவும் வழியில்லை. மேம்பாலம் கட்டுவது மட்டுமே ஒரே தீர்வு என போக்குவரத்து போலீசார் கை விரித்துள்ளனர்.
தேனி போக்குவரத்து நெரிசல் நிலவரம் குறித்து போலீசார் கூறியதாவத: தேனி நகராட்சியில் பூதிப்புரம் பிரிவு, பழைய பஸ்ஸ்டாண்ட் நுழைவு வாயில், பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியேறும் இடம், பங்களாமேடு சந்திப்பு, பாரஸ்ட்ரோடு சந்திப்பு, அரண்மனைப்புதுார் சந்திப்பு, புதிய பஸ்ஸ்டாண்ட் சந்திப்பு, அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம்் சந்திப்பு, பாத்திமா தியேட்டர் சந்திப்பு, காந்திநகர் ரோடு பிரிவு, கண் மருத்துவமனை பிரிவு, நகராட்சி சந்திப்பு, பழைய ஜிைஹச்ரோடு சந்திப்பு, பழைய தாலுகா அலுவலக சந்திப்பு, பெத்தாட்ஷி விநாயகர் கோயில் சந்திப்பு, கிழக்கு சந்தை, மேற்கு சந்தை சந்திப்புகள் மிகவும் அபாயகரமான விபத்தை உருவாக்கும் இடங்களில் நடந்த சந்திப்புகள் ஆகும். இங்கு போக்குவரத்து சிக்னல்கள் வைக்கவும் பணம் இல்லை. போலீசாரை நிறுத்தவும் (பற்றாக்குறை காரணம்) வழியில்லை. எனவே பொதுமக்கள் தாங்களே சுதாரித்து கவனமாக செல்ல வேண்டியதை தவிர வேறு வழியில்லை. போலீசார் முடிந்த அளவு நேரு சிலை, பழைய பஸ்ஸ்டாண்ட் சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனியில் மதுரை, கம்பம், பெரியகுளம் ரோடுகளை நேரு சிலை ரவுண்டானாவுடன் இணைத்து மேம்பாலம் கட்ட அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இந்த பாலம் பணிகள் முடிந்து விட்டால், 12 ரோடு சந்திப்புகளில் விபத்து அபாயம் குறைந்து விடும். மீதம் உள்ள இடங்களில் சிக்னல் போட முடியும். அல்லது போலீசாரை நிறுத்த முடியும். தேனி வியாபாரிகளை பொறுத்தவரை சிலர் மட்டுமே பாலம் வருவதை விரும்பவில்லை. பெரும்பாலான வியாபாரிகள் நகரில் நிலவும் நெரிசல் அடிக்கடி ஏற்படும் விபத்தினை கருத்தில் கொண்டு வியாபாரிகளுக்கு பாதகம் இல்லாத வகையில் தரைவழிப்போக்குவரத்தும் நடக்க வேண்டும். மேம்பாலமும் வேண்டும் என கேட்கின்றனர். அரசு மேம்பாலம் கட்டப்போவதாக அறிவித்துள்ளது. இந்த பணிகள் எவ்வளவு வேகமாக தொடங்குகிறதோ அந்த அளவு நகருக்கு நல்லது நடக்கும் இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu