தேனி மாவட்ட செஸ் போட்டி: வெற்றி பெற்றவர்கள் விவரம்
தேனி மாவட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், நிர்வாகிகள், அதிகாரிகள்.
தேனியில் மாநில செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய போட்டிகளுக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் இணைந்து நடத்தப்பட்டது. பொருளாளர் ஆசிரியர் கணேஷ் குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் குபேந்திரன் முன்னிலை வகித்தார், தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் துவங்கி வைத்தார். முடிவில் மாநில அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
முன்னதாக அகாடமி தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க நடுவருமானா சையது மைதீன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகாடமி இயக்குனர் அஜ்மல்கான் செய்திருந்தார், நடுவர்களாக தேனழகன், மேனகா, நூர்ஜஹான், விஷால் ஆகியோர் செயல்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா, டாக்டர்கள். அறவாழி, பிரபாகரன், சரவணன், லயன்ஸ் கிளப்பை சார்ந்த சாய் வெங்கடேசன், வீரராஜ், முருகன், ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
வெற்றி பெற்றோர் விபரம். 8 வயதுக்கு கீழ் பிரிவில் 1. லோகேஷ் கிருஷ்ணா, 2. ஹனிசாக்கிதா 3, நித்தின்ராஜ் 4.மோனிஷா 5, சர்வேஷ் 6, சிந்து ஜஸ்வின் 7. கிர்த்திக் 8, ஆதேஸ் கிர்திக் 9. சாய் கிருஷ்ணா 10, ஹரிணி ஶ்ரீ ஆகியோரும்
10 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் 1. தியாஸ்ரீ 2, செல்வ நிரன்ஜன் 3.ஆக்னேயா 4. இஷான் 5. தேஹந் 6, ஹரிஷ் ரக்சன் 7. சுபவர்ஸ்னி 8 சர்வேஷ்வர். 9. சாய் சரவணா 10. தேவாங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
12 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் 1, ஜோ இன்பென்ட் 2. ஹர்ஷித் 3. சாத்வீகா 4. கவின் கண்ணன் 5. ஸ்ரீ கீர்த்திகா 6, ஸ்ரீசரன் 7. தன்யஸ்ரீ 8 கவிரத்தினம் 9. ஹர்சினி 10. ஜெய் ஹர்சினி ஆகியோரும்
15 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில்1. பரணி 2. தரணிக்காஸ்ரீ 3. ராஜாமுகமது 4. திருகார்த்திக் 5. வர்ஸ்னிப்ரியா 6.நாகபிரனேஷ் 7. சன்ஜெய்குமார் 8. சுஜய் 9. பிரிதிவ் பாண்டியன், 10. ப்ரேம் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
சிறந்த பள்ளிகளுக்கான விருது கொடுவிலார்பட்டிதேனி கம்மவர் சங்க பப்ளிக் பள்ளி, லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ரேணுகா வித்தியாலயா பள்ளிக்கும், K.லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளிக்கும், முத்துதேவன்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கும், தேனி தி லிட்டில் கிங்டம் பள்ளிக்கும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu