தேனி அரசு மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு வரும்

தேனி அரசு மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு வரும்
X
தேனி சமதர்மபுரத்தில் உள்ள என்.ஆர்.டி., அரசு மருத்துவமனை மீண்டும் முழு அளவில் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.

தேனி சமதர்மபுரத்தில் பல ஏக்கர் பரப்பில் சிறப்பான கட்டட வசதிகளுடன், உள்கட்டமைப்பு வசதிகளுடன் என்.ஆர்.டி., அரசு மருத்துவமனை உள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனை திறக்கப்பட்டதும், இந்த கட்டடம் மூடப்பட்டது. அதன் பின்னர் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மட்டும் இந்த கட்டடம் பயன்பட்டது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையினை முழு வீச்சில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் சட்டசபையில் வலியுறுத்தினார். இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவும், குழந்தைகள் நல சிகிச்சை சிறப்பு பிரிவும் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், 'மேற்கண்ட இரண்டு பிரிவுகளும் தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ளன. தனியாக அரசு மருத்துவமனையும் உள்ளது. எனவே என்.ஆர்.டி., மருத்துவமனை இன்னும் சிறப்பான வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, முழு அளவில் மருத்துவ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என மட்டும் தெரிவித்தார். எத்தகைய மருத்துவ பயன்பாடு என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி