தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
X

மாதிரி படம் 

தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் திருப்திகரமான நிலையில் இருப்பதால், கோடை சாகுபடி செய்ய உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்

தேனி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கத்தை விட 70 சதவீதம் மழை அதிகம் பெய்தது. இதனால் இன்று வரை முல்லை பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணைகளில் நீர் மட்டம் முழு அளவில் உள்ளது.

வைகை ஆறு, முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, மருதாநதி உள்ளிட்ட ஆறுகளிலும் இன்னும் தண்ணீர் வரத்து உள்ளது. அதேபோல் கண்மாய்கள், குளங்களும் 70 சதவீதம் வரை நிறைந்து காணப்படுகிறது. மழை பெய்த காலங்களில் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து மலையடிவாரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் நீர் சுரக்கத்தொடங்கியது. அந்த அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாக உயர்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிணறுகள், போர்வெல்களில் நல்ல நீர் ஊற்று கிடைத்து வருகிறது. நெல், வாழை, கரும்பு, சோளம், மக்காச்சோளம், காய்கறிகள் அறுவடை செய்த பின்னர் கோடை சாகுபடியையும் தொடரலாம் என முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Tags

Next Story
ai marketing future