தேனி: வார்டு உறுப்பினர் பதவிகளிலும் பெண்களுக்கே அதிக ஒதுக்கீடு

தேனி: வார்டு உறுப்பினர் பதவிகளிலும் பெண்களுக்கே அதிக ஒதுக்கீடு
X
தேனி மாவட்டத்தில் உள்ள 177 நகராட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் 91 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தேனி, போடி, கம்பம் நகராட்சிகளில் தலா 33 வார்டுகள் உள்ளன. சின்னமனுாரில் 27, கூடலுாரில் 21, பெரியகுளத்தில் 30 வார்டுகள் உள்ளன. ஆக மொத்தம் ஆறு நகராட்சிகளில் 177 வார்டுகள் உள்ளன.

தற்போது நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வார்டு ஆறு நகராட்சி தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் மொத்தம் உள்ள 177 வார்டுகளில் 91 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பெண்களே அதிகளவில் இடம் பிடிக்கின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture