தேனி மாவட்டம்: ஒரு வாரமாக தண்ணீரில் மிதக்கும் பல்வேறு அரசு அலுவலகங்கள்

தேனி மாவட்டம்: ஒரு வாரமாக தண்ணீரில் மிதக்கும் பல்வேறு அரசு அலுவலகங்கள்
X

சீலையம்பட்டி வி.ஏ.ஓ. அலுவலக பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்.

சீலையம்பட்டி வி.ஏ.ஓ. அலுவலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் ஒரு வாரமாக மழை நீரில் மிதப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது

தேனி ஒன்றியத்துக்குள்பட்ட சீலையம்பட்டி வி.ஏ.ஓ. அலுவலகத்தை சுற்றிலும் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீலையம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் என அனைத்தும் ஒரே பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கி உள்ளதால், இப்பகுதியே சுகாதாரமற்ற சூழலுக்கு மாறிப்போனது. அதிகளவு கொசுத்தொல்லை, தண்ணீரில் உருவான புழுக்கள், துர்நாற்றம் என பல பிரச்னைகைள் இப்பகுதி மக்களை துயரப்படுத்தியுள்ளது. இதனால், இப்பகுதிக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கன்வாடி குழந்தைகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்னைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய முன்வர வேண்டும் என கிராம மக்கள் வலியறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture