தேனி மாவட்ட சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்ட   சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
X

தேனியில் நடந்த சிறுபலசரக்கு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் பேசினார்.

தேனி மாவட்டத்தில் தரமான பொருட்களை மட்டுமே விற்பது என சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி மாவட்ட சிறுபலசரக்கு வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஆரோக்கியபிச்சை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இல. ஆத்தியப்பன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சங்க உறுப்பினர்கள் அனைவரும் சமுதாயத்தில் தனிமனித ஒழுக்கத்தோடு வாழ்வதை கடமையாக கொள்ள வேண்டும். பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். நம் சங்க கடைகாரர்கள் தரமான பொருட்களையே கடைகளில் வாங்கி விற்பனை செய்ய வேண்டும். அரசு வங்கிகளில் மட்டுமே கடன் வாங்க வேண்டும், நகைகளை அடகு வைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!