தேனி மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை: மல்லிகைப்பூ ரூ.2000

தேனி மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை: மல்லிகைப்பூ ரூ.2000
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2000க்கு விற்பனையானது.

தேனி மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.2000ம், கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500, வெள்ளை ஜாதிப்பூ ரூ.2000ம், பட்டன்ரோஸ் ரூ.300, செண்டு பூ ரூ.80, சம்மங்கி, செவ்வந்தி ரூ.200, கோழிக்கொண்டை பூ, துளசி 40 என விற்கப்பட்டது.

கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையிலும், இந்த விலை உயர்வால் நல்ல வருவாய் கிடைத்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!