கேரள ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் தேனி மாவட்ட இயற்கை உரங்கள்!
தேனி மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அதிகமாக நடந்து வருகிறது. ஆடு, மாடுகளுக்கு உணவிடும் விவசாயிகள் அந்த உணவை சிறிய அளவில் நறுக்கி கொடுக்கின்றனர்.
இதனால் வீணடிக்காமல் ஆடு, மாடுகள் தின்று விடுகின்றன. அதேபோல் தேனி மாவட்டத்தில் நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு அதிகளவில் உள்ளது. இவற்றின் கழிவுகளையும், ஆடு, மாடுகளின்் கழிவுகளையும் விவசாயிகள் தனியாக சேகரித்து வைக்கின்றனர்.
கேரள ஏலத்தோட்டங்கள், மிளகு, காபி, தேயிலை தோட்டங்களுக்கு இந்த உரங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கேரள விவசாயிகள் உரக்கடைகளில் விற்கப்படும் இயற்கை உரங்களை வாங்குவது கிடையாது.
தனியாக ஏஜன்ட்களை அணுகி, விவசாயிகளிடம் இருந்தே இயற்கை உரங்களை வாங்கிச் செல்கின்றனர். தவிர விவசாயிகள் சேமித்து வைத்துள்ள இடத்திற்கே வாகனங்களை அனுப்பி சேர்த்து வைத்துள்ள குப்பைகளை அவர்களது சொந்த செலவிலேயே எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பது மட்டுமின்றி வாகன செலவும், குப்பைகளை ஏற்றும் செலவும் மிச்சமாகிறது. இதன் மூலமும் மாதந்தோறும் குறிப்பிட்ட வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயினை நாங்கள் ஆடு, மாடு, கோழிகளின் பராமரிப்பிற்கே பயன்படுத்துகிறோம் என தேனி மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu