தேனி மாவட்டம்: ஓடையாக மாறிய முத்தலாபுரம் சாலை

தேனி மாவட்டம்: ஓடையாக மாறிய முத்தலாபுரம்  சாலை
X

இது நீரோடை என நினைத்து விடாதீர்கள். சின்னமனுாரில் இருந்து முத்தலாபுரம் செல்லும் நீரில் மூழ்கி ஓடையாக மாறி உள்ளது.

சின்னமனுாரில் பெய்த பலத்த மழையால் முத்தலாபுரம் சாலை 3 கி.மீ. நீளத்துக்கு தொடர்ச்சியாக 14 மணி நேரம் நீரி்ல மூழ்கியது

சின்னமனுார் பகுதியில் பெய்த பலத்த மழையால் முத்தலாபுரம் கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் தொடர்ச்சியாக 14 மணி நேரம் தண்ணீர் சென்றதால் சாலை ஓடையாக மாறிப்போனது.

சின்னமனுார் பகுதியில் இன்று பெய்த பலத்த மழையால் சின்னமனுாரில் இருந்து முத்தலாபுரம் செல்லும் ரோட்டில் இன்று அதிகாலை 3 மணிக்கு நீர் வரத்து தொடங்கியது. ரோட்டில் கிட்டத்தட்ட 3 கி.மீ. தொலைவுக்கு முழுமையாக மூழ்கடிக்கப்பட்டு தண்ணீர் 14 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் சென்றது.இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இப்பகுதி விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பல நுாறு ஏக்கர் பரப்பில் தண்ணீர் தேங்கி நின்றது.

Tags

Next Story