தேனி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள்

தேனி மாவட்ட அளவிலான  செஸ் போட்டிகள்
X

தேனி மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் நிர்வாகிகள்.

தேனியில் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன

தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 48-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் அகாடமி வளாகத்தில் நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். அகாடமி பொருளாளர் கணேஷ்குமார், வனசரகர் (ஓய்வு) அமானுல்லா முன்னிலை வகித்தனர்.

அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி ஏற்பாடுகளை அகாடமி இயக்குனர் அஜ்மல்கான் செய்திருந்தார். ஆசிரியர் மேனகா நடுவராக செயல்பட்டார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தேனி சில்வர் ஜூப்லி லயன்ஸ் கிளப் தலைவர் பாலமுருகன், செயலாளர் சீனிவாசன், தேனி மேலப்பேட்டை நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன். தேனி கம்மவர் சங்க கல்லூரி செயலாளர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

வெற்றிபெற்ற மாணவர்கள் விபரம்: Under - 10 பிரிவில் சித்தேஷ் .ஹர்ஷித் .சந்தோஷ் ஜெய் ஆதவ்.தேகந் .லோகேஷ் சக்தி .தர்ஷசன். தன்யாஸ்ரீ..தியா ஸ்ரீ சர்வேஷ் .ஆனந்தநாயகி .செல்வநிரன்ஜன். சுசிந்திரசோழன் ஆகியோரும்

Under - 14 பிரிவில் ரகுநாத், பிரித்திவி, ஜோஸ்வா சாய்வர்சன், சாய்ரிஷி, ஸ்ரீ வர்சன், . தாரணிக்காஸ்ரீ, சந்தோஷ் பாண்டியன், ரூசன், பிரிதிவ் பாண்டியன், விஷ்ணு கார்த்திக் ஆகியோரும், Open to all பிரிவில் வரதன். ராசிகுமார் .தாரணிக்காஸ்ரீ பிரணவ். விசாகன். முக்தேஷ் பரணி ராஜாமுகமது. சைரஸ்ப்ளசன், திருமுகன், சிறந்த இளம் மாணவிகள் பரிசுகள் தன்யாஸ்ரீ, ரியா, தியாஸ்ரீ ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இன்று ஆந்திராவில் நடைபெறும் தேசிய செஸ் போட்டிக்கு தேர்வாகி செல்லும் அகாடமி மாணவர்கள் அஸ்வத், சைரஸ் ப்ளசன் ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story