அக். 27ல் தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்
பைல் படம்
தேனி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார். அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அக்டோபர் 27ம் தேதி அன்று இந்த பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் உத்தமபாளையம், பெரியகுளம் வாக்காளர் பதிவு அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடிநாயக்கனுார் மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் தேனி, பெரியகுளம், போடிநாயக்கனுார், சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும், நகராட்சி ஆணையர் அலுவகங்களிலும் அன்று முதல் இந்த பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்கான சிறப்பு முகாம்கள் 04.11.2023, 05.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023-ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்படும். வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 09.12.2023-க்குள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்படும் என ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu