தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியீடு

தேனி  மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியீடு
X

தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் முரளீதரன் இன்று வெளியிட்டார்.

தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் முரளீதரன் வெளியிட்டார்.

தேனி கலெக்டர் முரளீதரன் இன்று வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 059 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 74 ஆயிரத்து 678 பெண் வாக்காளர்கள், 195 இதர வாக்காளர்கள் உட்பட மொத்தம் 11 லட்சத்து 27 ஆயிரத்து 932 வாக்காளர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆண்டிபட்டி தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 378 வாக்காளர்கள், பெரியகுளம் தொகுதியில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 205 வாக்காளர்கள், போடி தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 978 வாக்காளர்கள், கம்பத்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 371 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த மாதம் 13, 14, 27, 28 (சனி, ஞாயிறு) கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட அத்தனை பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings