தேனி மாவட்டம்: இரண்டு நாட்களாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டம்: இரண்டு நாட்களாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

தேனி மாவட்டத்தி்ல் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தலா ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தலா ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்து 400 பேருக்கு கொரோவா நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் நேற்றும், இன்றும் தலா ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பக்கத்து மாநிலமான கேரளாவை சேர்ந்த சிலரும், வெளி மாவட்டங்களில் இருந்து, தேனி மாவட்டத்திற்கு வந்த ஓரிருவருக்கும் மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களும் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையி்ல், மருத்துவமனையில் கொரோனா வார்டில் 10 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!