பிளாஸ்டிக் பொருட்கள் வேண்டாம் : கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள்
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா(கோப்பு படம்)
மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் ஷஜீவனா பேசியதாவது:
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசுத்துறை அலுவலங்களுக்கு நேரில் சென்று அலுவலர்களை சந்தித்து வழங்கி வரும் நிலையினை மாற்றி, மாதம் ஒருமுறை கலெக்டர் தலைமையில் ஒரு கிராமத்தினை தேர்ந்தெடுத்து அனைத்துறை அலுவலர்களும் மக்களைத் தேடி, மாவட்ட நிர்வாகமே நேரில் சென்று அங்கு பொதுமக்களை சந்தித்து, ஒவ்வொரு இடத்திலும் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு அதனை டிஜிட்டல் சான்றிதழ்களாக இ-சேவை மையங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் பல்வேறு விதமான சான்றிதழ்கள் இ-சேவை மையங்கள் மூலமாக விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில், மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்த்திடும் பொருட்டு மேல்படிப்பு தொடருவதற்கான பல்வேறு கடன் உதவிகள் வங்கி மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி தொடர ஏதேனும் தடை ஏதுமிருப்பின் உரிய அலுவலரை அணுகி ஆலோசனை பெறலாம். குழந்தை திருமணம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தங்களது பகுதியில் ஏதேனும் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. மேலும் குடிநீர் கிணறுகளில் பிளாஸ்டிக் கலப்பதனால் பொதுமக்களுக்கு விநியோக்கப்படும் குடிநீரில் தரக்குறைவு ஏற்படுகிறது. முடிந்தவரை பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது குடிநீரை சில்வர் பாட்டில் போன்றவற்றை பயன்படுத்துவரை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu