தேனி, திண்டுக்கல், மதுரை விநாயகர் ஊர்வலம்: சிவசேனா எம்.பி.க்கள் பங்கேற்பு

தேனி வீரபாண்டியில் சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் குரு அய்யப்பன் பேசினார்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் நடந்த சிவசேனா கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் ஜி கே பாலாஜி தலைமை வகித்தார், இளைஞர் அணி மாநில தலைவர் திருமுருக தினேஷ், மாநில செயலாளர் குரு ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் ஜி. கே. பாலாஜி கூறியதாவது: தமிழகம் முழுவதும் சிவசேனா கட்சி சார்பாக 5001 இடங்களில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடைபெறும். தற்போது சிவசேனா கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது. வரும் 31- 8- 2022 (ஆகஸ்ட் 31) முதல் விநாயகர் சதுர்த்தி தமிழகமெங்கும் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.
1-9. 2022 (செப்டம்பர் முதல் தேதி) அன்று தமிழக முழுவதும் விநாயகர் சிலையை நீர்நிலை பகுதிகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தேனி மாவட்டத்தில் உள்ள சிவசேனா கட்சி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை (செப்டம்பர் 2ம் தேதி) 02/09/2022ம் தேதி கரைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .ஆனால் தேனி மாவட்ட காவல்துறையினர் தேனியில் உள்ள இந்து அமைப்புக்கள் (செப்டம்பர் முதல்தேதி) 1-9- 2022 தேதி நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் சிவசேனா கட்சியினர் ஒன்றாம் தேதி கரைக்க வேண்டும் என்று காவல்துறை வாய்மொழியாக தெரிவித்து உள்ளனர். ஆனால் செப்டம்பர் இரண்டாம் தேதி கரைப்பதற்கு உத்தரவு தருமாறு கேட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சிவசேனா எம்.பி.,க்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் பங்கேற்கின்றனர் என தெரிவித்தார்.சிவசேனா கட்சியின் தேனி மாவட்ட செயலாளராக நாகேந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் அறிவி்த்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu