மைத்துனரை கொலை செய்தவருக்கு தேனி கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை

மைத்துனரை கொலை செய்தவருக்கு தேனி கோர்ட்  5  ஆண்டு சிறை தண்டனை
X
தனது மைத்துனரை கொலை செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன், (வயது56.) இவரது மனைவி முருகேஸ்வரி,( 52.) இவர்களது மகள் திருமணம் செய்வது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜேஷ்கண்ணன் தனது மனைவி முருகேஸ்வரியை திட்டியுள்ளார். தன் கண்முன்னே அக்காவை திட்டிய மைத்துனரை முருகேஸ்வரியின் தம்பி செந்தில் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்கண்ணன் இறந்தார். இந்த வழக்கில் ராஜதானி போலீசார் செந்திலை கைது செய்தனர். தேனி மாவட்டமுதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிபதி விஜயா குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!