தேனி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 439 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 439 ஆக அதிகரிப்பு
X
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில், 439 பேருக்கு கொரோனா (ஒமிக்ரான்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று 1296 பேர் மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள், இன்று காலை வெளியானது. இதன் அடிப்படையில் 439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இது ஒமிக்ரான் வகை தொற்று தான் எனக்கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள், தற்போதைய நிலவரப்படி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணி்ப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!