தேனியில் அதிகரிக்கும் பெருந்தொற்று: தயாராகும் மருத்துவமனைகள்

தேனியில் அதிகரிக்கும் பெருந்தொற்று:  தயாராகும் மருத்துவமனைகள்
X
தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவ கட்டமைப்புகளை தயார்நிலையில் வைத்திருக்க கலெக்டர் முரளீதரன் அறிவுறுத்தினார்.

தேனி மாவட்டத்தில் இன்று காலை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகம் வெளியிட்ட முடிவுகளின் அடிப்படையில், 14 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. நேற்று இதன் எண்ணிக்கை 41 என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய முடிவுகளில் குறைந்தது 60 முதல் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படலாம் என மதிப்பிட்டு இருந்தனர்.

நேற்று மாலை கலெக்டர் முரளீதரன் தலைமையில், சுகாதார, மருத்துவத்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய கலெக்டர் முரளீதரன், மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே ஆரம்ப சுகாதார நிலையம் முதல், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வரை அத்தனை மருத்துவமனைகளிலும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து விடுங்கள். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளையும் ஊக்கப்படுத்தி, தயார்படுத்துங்கள்.தேவையான மருந்து மாத்திரைகள், ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள், மின்வசதிகள், குடிநீர், கழி்ப்பறை வசதிகள் உட்பட அத்தனை வசதிகளையும் மேம்படுத்துங்கள் என அறிவுறுத்தினார்.

போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் அத்தனை பேரும் மாஸ்க் இல்லாமல் நடமாடும் மக்களை அறிவுறுத்தி, தேவைப்பட்டால் அபராதம் விதித்து, மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி