கூட்டுறவு சங்கங்கள் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு

கூட்டுறவு சங்கங்கள் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு
X

தேனி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் உழவர் கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பு ஆண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

தேனி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் உழவர் கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது.

எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், சரவணன், மகாராஜன், கலெக்டர் முரளிதரன், கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம், தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் ராமகிருஷ்ணன், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

தற்போதய சூழலுக்கு ஏற்ப பயிர்க்கடன் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். கோரமண்டல் பாக்டம்பாஸ் உரங்களை அதிகம் வழங்க வேண்டும்.

தேனி, கம்பம், ஆண்டிபட்டி ஒன்றியங்களில் பயிர்க்கடன் அதிகளவில் வழங்கப்பட வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை அடங்கல் வழங்கப்பட வேண்டும்.

தேங்காய் கொள்முதல் கூட்டுறவு சங்கங்களை அமைக்க வேண்டும். நுாறு நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் விவசாய பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்பது உட்பட விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

அமைச்சர் பெரியசாமி 147 பயனாளிகளுக்கு 58 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கி பேசியதாவது:

கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தவிர விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும்.

ஆறுகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை முறைப்படுத்துவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் வசிப்பவர்களை விவசாயம் செய்ய அனுமதிப்பது குறித்து முதல்வர் வனத்துறை அமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil