தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா: ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா: ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
X

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி வெள்ளி விழாவை தொடர்ந்து நடிகர் விக்னேஷ், கவிஞர் சினேகன் மரக்கன்று நட்டனர். நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி வெள்ளி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி வெள்ளிவிழா 3ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லுாரி செயலாளர் காளிராஜ் வரவேற்றார். உறவின்முறை தலைவர் கே.பி.ஆர்.,முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி விடுதி செயலாளர் கே.கே.சேகர், கல்லுாரி முதல்வர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர். 3ம் நாள் நிகழ்ச்சியாக கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் நடிகர் விக்னேஷ், கவிஞர் சினேகன், கன்னிகா சினேகன் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து கல்லுாரி வளாகம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. கல்லுாரி இணைச் செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி