பள்ளியில் குழந்தைகளுடன் சத்துணவு சாப்பிட்ட தேனி கலெக்டர்

பள்ளியில் குழந்தைகளுடன்  சத்துணவு சாப்பிட்ட தேனி கலெக்டர்
X

மரிக்குண்டு அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட கலெக்டர் முரளீதரன்.

ஆண்டிபட்டிக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர் முரளீதரன் பள்ளி சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டார்

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் கள ஆய்வுக்கு சென்ற கலெக்டர் முரளீதரன் மரிக்குண்டு கிராமத்தில் அரசு பள்ளியில் சமைக்கப்பட்டிருந்த சத்துணவினை சாப்பிட்டு ருசிபார்த்தார்.

தேனி கலெக்டர் முரளீதரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பி.டி.ஓ -க்கள் சேகரன், ரவிச்சந்திரன், சேதுக்குமார், ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர். பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, ஒக்கரைப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி, வைகை அணை, மேல்மங்கலம், வடுகபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் நடைபெறும் அரசு திட்டப்பணிகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது மதிய நேரத்தில் மரிக்குண்டு கிராமத்தில் உள்ள சத்துணவு மையத்திற்கு சென்ற கலெக்டர் முரளீதரன் அங்கு மாணவ, மாணவிகளுக்காக சமைக்கப்பட்டிருந்த உணவினை சாப்பிட்டு ருசி பார்த்தார். உணவின் தரம் சிறப்பாக இருப்பதாக பாராட்டிய கலெக்டர், அப்பள்ளியில் குறைகள் கோரிக்கை விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துச்சென்றார் ஆட்சியர்.






Tags

Next Story
ai as the future