முல்லைப் பெரியாற்றில் மீன்குஞ்சுகள் வளர்க்கும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியர்

முல்லைப் பெரியாற்றில் மீன்குஞ்சுகள்  வளர்க்கும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியர்

முல்லைப்பெரியாற்றில் கலெக்டர் ஷஜீவனா (சிவப்பு நிற உடை அணிந்தவர்) மீன்குஞ்சுகளை வளர்ப்பதற்கு விட்டார்.

முல்லைப் பெரியாற்றில் 2.40 லட்சம் மீன்குஞ்சுகளை வளர்க்கும் பணியை தேனி கலெக்டர் ஷஜீவனா தொடக்கி வைத்தார்

தேனி மாவட்டம், வீரபாண்டி கன்னீஸ்வரமுடையார் கோயில் பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நாட்டின மீன்களை பெருக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் நாட்டின மீன்குஞ்சுகளை ஆறுகளில் விடும் பணிகளை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத் தின் நிதியுதவியுடன், பிரதான் மந்திரி சம்படா யோஜனா திட்டம் 2022-23-இன் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் (River Ranching Programme Under PMMSY) திட்டத்தின் கீழ் வைகை ஆற்றில் 40,000 மீன்குஞ்சுகளும் மற்றும் சுருளியாறு ஆற்றில் 2.00 லட்சம் மீன்குஞ்சுகளும் என ஆக மொத்தம் 2.40 லட்சம் நாட்டு இன மீன்குஞ்சுகள் வீரபாண்டி பகுதியில் சுருளியாற்றிலும் மற்றும் கண்டமனூர் பகுதியில் வைகை ஆற்றிலும் விடப்பட்டது.

நாட்டின் மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினை மீன்களை வைகை மற்றும் சுருளி ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, மணிமுத்தாறு அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் விடப்பட்டு, மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள் விரலிகளாக வளர்க்கப்பட்டது.

தேனி மாவட்டம் வைகை மற்றும் சுருளியாறுகளில் மொத்தம் 2.40 இலட்சம் மீன் விரலிகள் (மீன்குஞ்சுகள்) விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன் வளம் பேணுவதற்காக (Sustainable stock maintenance of native fish species in rivers) இத்திட்டம் செயல்படுத்தப்படடுள்ளது.

இந்நிகழ்வில், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலசுப்பிரமணியன், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதாசசி, மீன்வளத்துறை துணை இயக்குநர் (மதுரை மண்டலம்) காசிநாத பாண்டியன், உதவி இயக்குநர் (வைகை அணை) ராஜேந்திரன், மீனவர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர் முருகன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story