இன்று அலர்ட்டா இருங்க... மொபைலில் மெசேஜ் வரும்
தேனி மாவட்ட ஆட்சியர் (பைல் படம்)
தற்போது இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பூகம்பம், மேகவெடிப்பு, நிலச்சரிவு, புயல்மழை, கலவரம், தீவிரவாத தாக்குதல், போர்ச்சூழல் போன்ற இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. கோடை காலங்களில் அனல்காற்றும் வீசுகிறது.
இப்படி இயற்கை பேரிடர் ஏற்படும் காலங்களில் மக்களை உடனடியாக நொடிப்பொழுதில் அலர்ட் செய்து, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கு உடனடியாக மொபைல் மூலம் செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பி, அவர்களை அலர்ட் செய்ய இன்று அக்டோபர் ௨௦ம் தேதி தேனி மாவட்டத்தில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதற்காக இன்று அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் பேரிடர் தொடர்பான மெசேஜ்கள் வரும்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி 20.10.2023 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும் அனுப்பப்படவுள்ளது.
இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்றும், இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் எனவும், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu