தேனி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து மூன்று ஆர்ப்பாட்டங்கள்
கோவையில் தற்கொலை செய்து கொண்ட,மாணவி விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஜங்கால்பட்டி கிராமத்திற்கு பி.டி.ஆர். கால்வாயில் இருந்து மடைகள் கட்டித்தண்ணீர் வழங்க வேண்டும். தாமரைக்குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டு மாடு நலச்சங்கத்தினர் மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மீன்பிடி குத்தகையை பொதுஏலத்தில் விடக்கூடாது. வீடு இல்லாத மீனவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மீனவர்களுக்கு காப்பீடு, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு உதவிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மீனவர் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ( AIYF )மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu