டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
X
மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. கஞ்சா, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், சின்னமனூர், 14-வது வார்டு, முனீஸ்வரன் கோவில் 2-வது தெருவில் குடியிருக்கும் சந்திரன் என்பவரது மகன் சந்தோஷ் என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கம் ரூபாய் 99 ஆயிரத்து 930 , இரண்டு செல்போன்கள், எடை இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தோசை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.




Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா