தேனி : 115 மதுபாட்டில்கள் பறிமுதல், ஒருவர் கைது, போலீசார் விசாரணை.

தேனி : 115 மதுபாட்டில்கள் பறிமுதல், ஒருவர் கைது, போலீசார் விசாரணை.
X
சின்னமனூர் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்தி வரப்பட்ட 115 மதுபான பாட்டில்கள் பறிமுதல்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்திக் கொண்டு வரப்பட்ட 115 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சின்னமனூர் பகுதிகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின்பேரில், சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா, சார்பு ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது சின்னமனூரில் இருந்து கன்னிசேர்வைபட்டிக்கு சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர், அதில் 115 (குவாட்டர்) மதுபானபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவர் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த செல்லம் மகன் சேகர் என்பதும், இவர் சின்னமனூரில் உள்ள தனியார் பாரில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.


இதனைத்தொடர்ந்து, மதுபானங்களை கடத்தி வந்த சேகரை கைது செய்த சின்னமனூர் காவல்துறையினர், அவரிடமிருந்து 115 மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!