தேனி கஞ்சா வியாபாரியின் ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் சொத்து முடக்கம்

தேனி கஞ்சா வியாபாரியின் ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் சொத்து முடக்கம்
X
தேனி வருஷநாடு அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டது.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு உட்பட்ட குமணன்தெருவில், கீரிப்பட்டி முருகன் என்பவரது தென்னந்தோப்பில் 220 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கு விசாரணையில் கீரிப்பட்டி முருகனுக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இவரது அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், வங்கி இருப்பு உட்பட மொத்தம் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் ஏற்கனவே கைதான கஞ்சா வியாபாரியின் சொத்தும் முடக்கப்பட்டது. இப்போது இரண்டாவதாக இவரது சொத்து முடக்கப்பட்டது. அடுத்தடுத்து இந்த கடும் நடவடிக்கைகள் தொடரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!