தேனி கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தேனியில் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரபிரபு, 42. இவர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கஞ்சா விற்பனை செய்ததாக மகேந்திரபிரபுவை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் மீது மேலும் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தேனி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் முரளீதரன் பரிந்துரையை ஏற்று, மகேந்திரபிரபுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!