தேனி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம்

தேனி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம்
X

தேனி பேருந்து நிலையத்தில்  பயணிகள் நெரிசல் அதிகம் காணப்பட்டது.

நான்கு நாள் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பும் மக்களால் தேனி பேருந்து நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.

கடந்த நான்கு நாட்களாக தமிழ்புத்தாண்டு, புனிதவெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாள் விடுமுறை விடப்பட்டது. இதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்களும், படிப்பவர்களும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

நான்கு நாள் விடுமுறை முடிந்து, இன்று அனைவரும் கல்லுாரிக்கும், பணிபுரியும் ஊர்களுக்கும் திரும்பினர். ஒரே நேரத்தில் பயணிகள் அனைவரும் ஊருக்கு கிளம்பியதால், பேருந்து நிலையத்தில் நெரிசல் அதிகமாக இருந்தது. தேவைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளில் அதிக பயணிகள் ஏறி நின்று கொண்டே பயணித்தனர்.

Tags

Next Story
latest agriculture research using ai