தேனியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை!

தேனியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை!
X

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான 6 பேர்.

போடிநாயக்கனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, கரட்டுப்பட்டி கிராமத்துக்கு அருகே உள்ள புளியந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது காவல்துறையினரின் வாகனத்தை பார்த்தவுடன் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். எஞ்சியிருந்த 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம் ரூ.4500 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து போடி புறநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!