தடுப்பு சுவரில் அமர்ந்தவர் தவறி விழுந்து இறப்பு

தடுப்பு சுவரில் அமர்ந்தவர் தவறி விழுந்து இறப்பு
X
போடி அருகே உள்ள பாலம் தடுப்புச்சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள பாலம் தடுப்புச்சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போடி அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ் மகன் ஜெகநாதன் (40). இவர் நடை பயிற்சி சென்று விட்டு, தனது வீட்டருகே உள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், திடீரென நிலை தடுமாறி 16 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் முதுகு தண்டில் அடிபட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமலைராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!