தேனி, போடி, பெரியகுளம் திமுக நகர பொறுப்பாளர்கள் சஸ்பெண்ட்

தேனி, போடி, பெரியகுளம் திமுக நகர பொறுப்பாளர்கள் சஸ்பெண்ட்
X

பைல் படம்.

தேனி, போடி, பெரியகுளம் திமுக நகர பொறுப்பாளர்கள் கட்சி தலைமையின் அறிவிப்பை மீறி செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி தி.மு.க., வடக்கு மாவட்டத்தில் தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், போடி நகர பொறுப்பாளர் செல்வராஜ், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., ஒதுக்கிய இடங்களில் தனது கட்சியினரை நிறுத்தி அந்த பதவிகளை கைப்பற்றினர்.

தேனியில் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது. போடி, பெரியகுளத்தில் நகராட்சி துணைத்தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது. பலமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கைப்பற்றப்பட்ட பதவிகளை விட்டுத்தர யாரும் தயாராக இல்லை. இதனால் தி.மு.க., தலைமை தேனி, போடி, பெரியகுளம் நகர பொறுப்பாளர்களை தற்காலிகமாக நீக்கம் செய்து அறிவித்துள்ளது.

இவர்களுக்கு பதில் இதுவரை வேறு நபர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படவில்லை. இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு இன்னும் கட்சி வாய்ப்பு வழங்குகிறது. தான் செய்த தவறை சரி செய்து, மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சி பதவியில் நீடிக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story