தேனி: பைக் நேருக்குநேர் மோதி விபத்து -கலெக்டர் மீட்பு
தேனியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து நடந்த இடத்தில், மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இவரது மனிதநேய செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டினார்கள்.
கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்விற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சென்று கொண்டிருந்தார், அப்போது கோடாங்கிபட்டி அருகே உள்ள புறவழிச்சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த போடிநாயக்கனூரை சேர்ந்த தருமர் மற்றும் ஓடைப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி ஆகிய இரண்டு நபர்கள் இரத்த காயமடைந்து சாலையில் விழுந்து கிடப்பதை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், காயம் பட்டவர்களை தனதுடன் வந்த அரசு வாகனத்தில் ஏற்றி, வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் திட்ட இயக்குநர் ஆகியோரிடம் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு, இப்பகுதியில் இதுபோன்று சாலை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையினை சமர்பித்திட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu