தேனி: அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைப்பு

தேனி: அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களும்  கட்டுப்பாட்டு அறையுடன் இணைப்பு
வீடுகள் குடியிருப்புபகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன

தேனிக்குள் உள்ள அனைத்து சி.சி.டி.வி., கேமராக்களும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

தேனி நகராட்சியில் முக்கிய வீதிகள் அனைத்திலும் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியாக இரண்டு கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேனியில் உள்ள தனியார் வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்தால், ஒட்டுமொத்த தேனி நகராட்சியும் போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story