விலகி ஓடிய அதிமுக தலைவர்கள்; வலியச்சென்று இழுத்து வந்த தலைமை!

விலகி ஓடிய அதிமுக தலைவர்கள்; வலியச்சென்று இழுத்து வந்த தலைமை!
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தயக்கம் காட்டி விலகி நின்ற தலைவர்களை அ.தி.மு.க., மேலிடம் சரிகட்டி களத்தில் இறக்கி விட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் பலர், இம்முறை களம் இறங்க மாட்டோம். மாநில தலைமை தான் செலவு செய்ய வேண்டும் எனக்கூறி தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் விலகி நின்றனர். இதனால் வேட்பாளர் தேர்வு கூட, அதிமுக தரப்பில் சற்று மந்தநிலையில் இருந்தது.

இந்நிலையில், தயக்கம் காட்டிய மாவட்ட குட்டி தலைவர்களுடன் மாநில தலைமை பேச்சு வார்த்தை நடத்தி உற்சாகப்படுத்தி களத்தில் இறக்கி விட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக மீண்டும் களத்திற்கு வந்து விட்டனர். மாவட்ட அளவிலான தலைவர்கள் களத்திற்கு வந்து விட்டதால், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு