தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்த விபத்து: இரண்டு வாலிபர்கள் பலி

தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்த விபத்து: இரண்டு வாலிபர்கள் பலி
X
சின்னமனுார், ஆண்டிபட்டியில் நடந்த விபத்துக்களில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியை சேர்ந்தவர் அஜித், 26. இவர் டூ வீலரில் ஆண்டிபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழமுத்தனம்பட்டி விலக்கில் எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் மோதி இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னமனுார் ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் வாசுவிக்ரம், 21. இவர் தனது நண்பர்கள், உறவினர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் மேலே ஏறிய பின்னரும் வாசுவிக்ரம் மட்டும் குளித்தார். பின்னர் வாசு விக்ரம் பைப்பை பிடித்து மேலே ஏறினார். அப்போது மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!