தேனி 32வது வார்டில் பாதாள சாக்கடை திட்டம்: அமைச்சர் பெரியசாமி சூசகமான அறிவிப்பு

தேனி 32வது வார்டில் பாதாள சாக்கடை திட்டம்: அமைச்சர் பெரியசாமி சூசகமான அறிவிப்பு
X

தி.மு.க., வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக அமைச்சர் பெரியசாமி பேசினார்.

தி.மு.க., கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதும், அரைகுறையாக விடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செய்து முடிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி சூசகமாக அறிவிப்பு வெளியிட்டார்.

தேனி 32வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வழக்கறிஞர் செல்வம், 27வது வார்டு தி.மு.க., வேட்பாளர் அய்யனார் பிரபு ஆகியோரை ஆதரித்து அமைச்சர் பெரியசாமி, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் உட்பட பலர் பிரச்சாரம் செய்தனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கையா, முன்னாள் எம்.பி., செல்வேந்திரன், தி.மு.க., தேனி நகர செயலாளர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் பெரியசாமி பேசுகையில், கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் பல குழப்பங்கள் எழுந்துள்ளன. எங்கள் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதுமே நாங்கள் இந்த ஆண்டே பாதாளசாக்கடை முழுமையாக தேவைப்படும் இடத்தில் நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்றுவோம் என தெரிவித்தார். (32வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும். 27வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் மேம்படுத்தப்படும் என்பதை மறைமுகமாக குறிக்கும் வகையில் அமைச்சர் சூசகமாக குறிப்பிட்டார்).

வாரச்சந்தைகளை விரிவுபடுத்துவோம். அனைத்து வார்டுகளிலும் ரேஷன் கடை வேலை வாய்ப்புடன் கூடிய சிறு தொழில்கள் விரிவுபடுத்தப்படும். தி.மு.க., தேர்தல் காலத்தில் கொடுத்த 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2761 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளோம்.

தேனி மாவட்டத்தில் 109 கோடி ரூபாய் செலவி்ல் மிகவும் நவீனமான அரிசி ஆலை அமைக்கப்படும். மாவட்டத்தினை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவும், திட்டங்களை முழுமையாக நிறைவேற்றவும் தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பளியுங்கள். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து அணையில் 152 அடி தண்ணீர் தேக்க உரிமை பெற்றது தி.மு.க., அதேபோல் அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி சாதனை படைத்தோம். முல்லை பெரியாறு அணைகளை மீட்க முழுமையாக தி.மு.க., பாடுபட்டது. உரிமைகளை மீட்டது. இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!