தேனி 15வது வார்டு பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கும் முக்கிய நிர்வாகிகள்

தேனி 15வது வார்டு பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கும் முக்கிய நிர்வாகிகள்
X

இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட முக்கிய தலைமை நிர்வாகி ராமராஜை பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

தேனி நகராட்சி 15வது வார்டு பா.ஜ., வேட்பாளர் புவனேஸ்வரிக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

தேனி நகராட்சி 15வது வார்டு பா.ஜ., வேட்பாளர் புவனேஸ்வரி. இவர் தான் வெற்றி பெற்றால் தனது வார்டில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயினை சீரமைத்து படகு போக்குவரத்து விடுவேன் என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்த வாக்குறுதி வார்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில் பா.ஜ., வர்த்தகப்பிரிவு மாவட்டத்தலைவர் சிவக்குமரன், மாவட்ட செயலாளர் கே.கே.ஜெயராமன் நாடார் (தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சொத்துபாதுகாப்புக்குழு செயலாளர்) உட்பட முக்கிய நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்தனர்.

இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைமை நிர்வாகி ராமராஜ், மற்றும் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள், பொதுமக்கள், வர்த்தக முக்கிய பிரமுகர்கள், உள்ளூர், தெரு வி.ஐ.பி.,க்கள் உட்பட அத்தனை பேரையும் சந்தித்து தங்கள் வேட்பாளர் புவனேஸ்வரிக்கு ஆதரவு தருமாறும், தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

பா.ஜ., வேட்பாளர் வெற்றிக்கு களம் இறங்கி உழைப்பதாக முக்கிய பிரமுகர்கள் வாக்குறுதி கொடுத்தனர். இதனால் இன்று மாலை அல்லது நாளை காலை முதல் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக முக்கிய வி.ஐ.பி.,க்கள் அனைவரும் ஓட்டு சேகரிக்க வருவார்கள் என பா.ஜ.,வினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!