5 மாதத்திற்குப்பின், தேக்கடி சுற்றுலாத்தலம் நாளை மறுநாள் முதல் திறப்பு
பைல் படம்.
தேனி மாவட்டம் குமுளியில் இருந்து நான்கு கி.மீ., தொலைவில் உள்ள தேக்கடி சுற்றுலாத்தலம். தேக்கடி புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியில் இந்த சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகவும் சிறந்த சுற்றுலாத்தலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு ஏராளமானோர் வருகைபுரிவார்கள்.
இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் படகு சவாரி செல்வது தான் சிறப்பு அம்சம். படகு சவாரி செல்லும்போது பல வகையான வனவிலங்குகளை பார்த்து ரசிக்கலாம். இங்கு குளிர்ச்சியாகவும் மிகவும் அற்புதமானதாகவும் இருக்கும்.கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் இந்த சுற்றுலா தளம் திறக்கப்பட்டது.
தற்போது கேரளா முழுவதும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சுற்றுலா தலமும் வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி திங்கள் கிழமை முதல் திறக்கப்படுகிறது என கேரள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதியில்லை. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu