தேனி அருகே மூடப்பட்ட கல்லுாரியில் பல கோடி ரூபாய் பொருட்கள் 'அபேஸ்'

தேனி அருகே மூடப்பட்ட கல்லுாரியில் பல கோடி ரூபாய் பொருட்கள் அபேஸ்
X

பைல் படம்.

தேனி அருகே மூன்று ஆண்டுகளாக மூடிக்கிடந்த தனியார் கல்லுாரிக்குள் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது.

தேனி அருகே வடபுதுப்பட்டியில் மூடப்பட்டிருந்த தனியார் பொறியியல் கல்லுாரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது.

தேனி அருகே வடபுதுப்பட்டியில் தனியார் பொறியியல் கல்லுாரி செயல்பட்டு வந்தது. மாணவர்கள் சேர்க்கை சரியாக இல்லாததால் கடந்த 2019ம் ஆண்டு முதல் கல்லுாரி மூடப்பட்டு கிடந்தது.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மர்ம நபர்கள் கல்லுாரிக்குள் புகுந்து உள்ளே இருந்த கல்லுாரி தளவாட பொருட்கள், ஆய்வக பொருட்கள், உபகரணங்கள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர்.

கல்லுாரி செயலாளர் கண்ணப்பன் கொடுத்த புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai powered agriculture