விவசாய விளைபொருட்கள் திருட்டு தேனி மாவட்ட விவசாயிகளுக்கு சிக்கல்

விவசாய விளைபொருட்கள் திருட்டு  தேனி மாவட்ட விவசாயிகளுக்கு சிக்கல்
X

பைல் படம்

விளைபொருட்களை திருட்டுக்கும்பல் இரவில் புகுந்து அறுவடை செய்து சென்று விடுவதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்

தேனி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் ஆட்டுக் கொட்டகை, கோழிக் கொட்டகைகளில் இரவில் அதிகளவில் திருட்டுக்கள் சகஜமாக நடந்து வருகிறது. ஆடு, கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பால் இந்த திருட்டுக்களும் அதிகரித்துள்ளன.தீபாவளி நெருங்கிய நேரத்தில் கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் ஆடுகள், கோழிகள் திருடு போயின.

இந்நிலையில் புதிய பிரச்னையாக விளைபொருட்கள் திருட்டு நடந்து வருகிறது.இந்த திருட்டுக்கும்பலை சேர்ந்த பலரை விவசாயிகளை பிடித்து பலமுறை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பல்வேறு வகை காய்கறிகள், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் விளைந்து கிடக்கின்றன. இந்த விளை பொருட்களை இரவு நேரங்களில் கும்பல் திருடி விடுகிறது. இதனை தடுக்க வழியில்லாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

ஏற்கனவே விளைச்சல் இல்லாமலும், விளைவிக்க ஆகும் அதிகப்படியான பொருட்செலவாலும், விளைந்த பொருட்களுக்கு விலை கிடைக்காமலும் விவசாயிகள் பரிதவிக்கும் நிலையில், இந்த திருட்டு பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அவர்களது தோட்டங்களில் விவசாயிகளே காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் திருட்டை தடுக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்