தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
X

பைல் படம்.

தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி கே.ஆர்.ஆர்., 3வது தெருவில் வசிப்பவர் ஜெயராணி, 70. இவரது மகன், மகள்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவரது மகள் தேனிக்கு வந்திருந்தார். மகளுடன் ஜெயராணி திருச்செந்துார் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து பதினாறு பவுன் நகைகள், 50 அமெரிக்க டாலர், 2 ஆயிரம் ரூபாய் இந்திய பணம், மலேசிய பணம் 200 ரிங்காட் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்றனர். இதன் மொத்த மதிப்பு 5 லட்சத்து 7 ஆயிரத்து 450 ரூபாய் ஆகும். இதுகுறித்து தேனி இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!