பாலைவனத்திற்குள் படையெடுக்கும் வல்லரசுகள்

பாலைவனத்திற்குள் படையெடுக்கும் வல்லரசுகள்
X

பைல் படம்

பாலைவனத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் மீது உலகநாடுகளின் கவனம் திரும்பி உள்ளது

ரஷ்யா- உக்ரைன் போருக்கு பின்னர் உலகின் சூழல் மாறி விட்டது. குறிப்பாக பணக்கார நாடுகள் என வர்ணிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளும், மேற்கு உலக நாடுகளும் இன்று பெரும் பிரச்னையில் சிக்கி உள்ளன. குறிப்பாக மின்சாரம் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரஷ்யா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகள் மேற்கு உலக ஐரோப்பிய நாடுகளை வேறு மாற்றுவழிகள் குறித்து யோசிக்க வைத்துள்ளன. முதலாவதாக மின்பற்றாக்குறையினை சீரமைக்கும் வழிகளை உலக நாடுகள் மேற்கொள்ள தொடங்கி உள்ளன. இதற்காக சூரியஒளி மின்சாரம் தயாரிக்க பாலைவனத்தை நோக்கி படையெடுக்கின்றன.

உலகிலேயே மேகமூட்டம் இல்லாத பகுதி என்றால் அது சகாரா பாலைவனம்தான். ஆண்டுக்கு 3600 மணிநேரம் தடையில்லா சூரியஒளி கிடைக்கும். தவிர மணல் புயலும் ஏராளமாகவே அடிக்கும். இதெல்லாம் தற்போது தங்கமாக மாறப்போகிறது. மேகமூட்டம் இல்லை எனில் தடையில்லாமல் பகல் முழுக்க சோலார் மின்சாரம் எடுக்கலாம். காற்றில் இருந்து மின்சாரம் எடுக்கலாம். மொராக்கோ ஸ்பெயினுக்கு மிக அருகே இருக்கும் நாடு. கடலுக்கு அடியே ஒரு கேபிளை இணைத்துவிட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஸ்பெயின் வழியே மின்சாரம் கொடுக்கலாம்.

ரஷ்யாவிடம் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதில் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் பிரச்னையாக மாறிவிட்டது. ரஷ்யா, தான் சொல்வதை கேட்காவிட்டால் எரிவாயு சப்ளையை நிறுத்துவேன் எனவும் பிளாக்மெயில் செய்து வருகிறது. மொராக்கோ வழியே மின்சாரம் வந்தால் அதன்மூலம் ரஷ்யாவின் ஆட்டத்தையும் முறியடிக்கலாம் என்ற யோசனையை செயல்படுத்துவதில் களமிரங்கியுள்ளனர்..அதன் தொடர்ச்சியாக மிகப்பெரிய சோலார் பேனல் தொழில்சாலையை மொராக்கோவில் அமைக்க ஐரோப்பிய யூனியன் உதவியுள்ளது. இதன் மூலம் மொராக்கோ பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார நிறுவனம் 580 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து கேபிள் வழியாத ஐரோப்பிய யூனியனுக்கும் விநியோகிக்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கேபிளின் கொள்திறன் 1400 மெகாவாட் ஆகும்.

தற்போது மொரக்கோவின் மின்தேவைகளில் 38% சோலார் பேனல் மூலம் கிடைக்கிறது. சீக்கிரம் 100% மின்சாரமும் கிடைக்கும் என்கிறார்கள். சொல்லபோனால் சகாராவின் 8% பரப்பளவை சோலார் பேனலில் மூடினால் போதும். ஒட்டுமொத்த உலகின் மின் தேவையும் பூர்த்தி ஆகும்.தவிர அங்கே கடலும் இருக்கிறது. நீர் என்பது ஹைட்ரஜன்+ஆக்ஸிஜன். சோலார் பேனல் மின்சாரம் மூலம் கடல்நீரை பிளந்தால் ஏராளமாக ஹைட்ரஜன் கிடைக்கும். ஹைட்ரஜனை பெட்ரோலுக்கு மாற்றாக பயன்படுத்தும் ஹைட்ரஜன் கார்களையும் உருவாக்கலாம். இப்படி மிக மலிவான மின்சாரம்+கடல் காம்பினேசன் உள்ள நாடுகள் குறைவு.

அதனால் அடுத்த வல்லரசு மொராக்கோ என்கிறார்கள். ஆனால் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் எல்லாம் சகாராவில் காய் நகர்த்த துவங்கிவிட்டார்கள். இந்தியாவின் தார் பாலைவனத்திலும் "மனிதன் வாழவே முடியாத பகுதி" என அழைக்கப்படும் பத்லா பகுதியில், பத்லா சோலார் கம்பனி நிறுவப்பட்டது. இதன் உற்பத்தித்திறன் 2245 மெகாவாட். சில ஆண்டுகளில் இது 1 லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் மாற்ற திட்டமிட்டுள்ளார்கள். அப்படி செய்தால் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் இங்கிருந்து உற்பத்தி ஆகும். ஆக இனி உலகெங்கும் பாலைவனம் இருக்கும் நாடுகளுக்கு கொண்டாட்டம் தான்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது