உலகமே கொண்டாடும் மெஸ்ஸி.. யார் இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
உலகம் முழுவதும் இருக்கும் கால் பந்தாட்ட ரசிகர்களின் நாயகனாக உள்ள மெஸ்ஸி, தற்போது நடந்து முடிந்த பிபா உலக கோப்பையில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். ஒவ்வொரு நாகவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். மெஸ்ஸி அதிக அளவிலான உலக கோப்பையில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டன் ஆன மெஸ்ஸி தனது பயணத்தை நிறைவு செய்தார்.
அர்ஜென்டினா கடந்த 1978 மற்றும் 1986களில் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. 1986ல் அணியின் கேப்டனாக இருந்த மாரடோனா கோப்பையை பெற்று தந்த நிலையில், தற்போது அந்த இடத்தினை மெஸ்ஸி பிடித்துள்ளார்.
அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்: உலகிலேயே விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியலில் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார். இவரின் வருமானம் 130 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதில் 75 மில்லியன் டாலர் வருமானம் என்பது விளையாட்டுகள் மூலமாகவும், 55 மில்லியன் டாலர் விளையாட்டு அல்லாத வருமானமாகவும் பார்க்கப்படுகிறது. உலகின் டாப் 10 விளையாட்டு வீரர்களின் பட்டியிலில் டாப் 5லியே இடம் பெற்றுள்ளார்.
மெஸ்ஸியின் நிகர மதிப்பு 620 மில்லியன் டாலர்களாகும் (இந்திய மதிப்பில் ரூ.5000 கோடிக்கு மேல்). இது அவரை உலகின் மிகப்பெரிய பணக்கார கால்பந்தாட்ட வீரராக மாற்றியது. அர்ஜென்டினாவின் தொழில்முறை கால்பந்து வீரர் ஆன மெஸ்ஸி, ஸ்பானிஷ் கிளப் பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகிய இரண்டிற்கும் கேப்டனாக உள்ளார்.
யார் இவர்? லியோனர் மெஸ்ஸி அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ நகரில் 1987ல் பிறந்தார். இவரின் 5 வயது குழந்தை பருவத்தில் இருந்தே கால்பந்து விளையாடத் தொடங்கினார். சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாடுவதில் ஆர்வத்துடன் இருந்த மெஸ்ஸிக்கு, அவரின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தான் முதல் பயிற்சியாளர். தனது 9 வயதிலேயே பல வெற்றிகளை குவித்த மெஸ்ஸி, தொடர்ந்து கால்பந்து உலகில் தன்னை ஒரு சிறந்த வீரராக நிலை நிறுத்திக் கொண்டார்.
மெஸ்ஸியின் குடும்பம்:கடந்த ஜூன் 30, 2017 அன்று திருமணம் செய்து கொண்ட மெஸ்ஸி, அவரின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸ்ஸோ, இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் ஆகும். அன்டோனெல்லாவும் மாடல் அழகியாவார். இவர் தனியாக சில தொழில்களையும் செய்து வருகின்றார்.
விருது கோப்பைகள்:10 லா லிகா கோப்பைகள், 4 சாம்பின்ஸ் லீக் கோப்பைகள், 3 கிளப் உலக கோப்பைகள், 20228ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியிலும் இவரின் அணி தங்க பதக்கம் வென்றது.கால்பந்துக் கடவுள் எனப் புகழப்படும் மாரடோனா, கால்பந்து விளையாட்டில் எனது வாரிசு என்று புகழும் வீரரானார் மெஸ்ஸி. அதனை தற்போது பிபா உலக கோப்பையில் நிரூபித்தும் காட்டியுள்ளார் மெஸ்ஸி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu