வேலையே இன்னும் முடியல... அதுக்குள்ள வசூலை ஆரம்பிச்சுட்டாங்க...
தேனி பூதிப்புரம் அருகே பைபாஸ் சாலையில் பணிகள் முடியாததால், வாகனங்கள் செல்ல முடியாத அளவு தடுப்புகளை அமைத்துள்ளனர்.
Toll Gate Pass -திண்டுக்கல்- குமுளி இடையே (அதாவது லோயர்கேம்ப் வரை) நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இருவழிச்சாலை தான் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளும் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. தேனியிலும், பெரியகுளத்திலும் பணிகள் பாக்கி உள்ளது. அதற்குள் இந்த ரோட்டின் முழு விவரங்களும் கூகுள் மேப்பில் ஏற்றப்பட்டுள்ளன.
இந்த ரோட்டில் கோட்டூர் அருகே டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. டோல் கட்டணம் செலுத்தி விட்டோமே... இனி ரோட்டில் ஜாலியாக பயணிக்கலாம் என காரில் வரும் பயணிகள் அத்தனை பேரும், தேனியிலும், பெரியகுளத்திலும் பணிகள் முடியாமல் உள்ள ரோட்டில் வந்து சிக்கிக் கொள்கின்றனர். இங்குள்ளவர்களிடம் கேட்டு, கேட்டு மாற்றுப்பாதையை கண்டறியும் முன்னர் பரிதவித்து விடுகின்றனர். குறிப்பாக, தேனியில் ரோடு பணிகள் முடியாத இடத்தில் இருந்து மாற்றுப்பாதை வழியாக மெயின்ரோட்டிற்கு வருவது மிகவும் சிரமம் நிறைந்த பயணமாகி விடுகிறது. இதனால் பயணிகள் கடும் எரிச்சலடைந்து விடுகின்றனர்.
தேனியில், நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம், பூதிப்புரம் ரோடு மேம்பாலம் கட்டும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்துள்ளது. பாலத்தின் இரு ஓரங்களிலும் கான்கிரீட் தடுப்புச்சுவர் ஒரு புறமும், மற்றொரு புறம் வலுவான கம்பி தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரயில்வே மேம்பாலத்தின் மீது மட்டும் பாதுகாப்பு கருதி இரண்டு அடுக்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழுமை பெற குறைந்தது, ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் வரை ஆகி விடும்.
பெரியகுளத்தில் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் நிறைவடையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் அங்கு ரோடு போடும் இடமே, சில பிரச்னைகளில் சிக்கி உள்ளது. இங்கு நிலம் கையகப்படுத்தும் இடத்தில் பிரச்னை நிலவி வருகிறது. இதற்கு தீர்வு கண்ட பின்னர், ரோடு அமைக்க வேண்டும். இதற்கே பல மாதங்களுக்கு மேல் ஆகி விடும். இப்படி பணிகள் முழுமை பெறாமல் உள்ள நிலையில், டோல் கட்டணம் வசூல் செய்வது எந்த வகையில் சரியான நடைமுறை ஆகும் என பயணிகள் கடும் எரிச்சலுடன் கேள்வி கேட்கின்றனர்.
அடிக்கடி இந்த ரோட்டினை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு இடங்களில் ரோடு கட்டாகிறது. அந்த பகுதியில் மாற்றுப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்பது தெரியும். ஆனால் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் புதியதாக இந்த வழித்தடத்தில் வருகின்றன. இவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் ஆகி விடுகிறது. மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கான அறிவிப்பு பலகைகளும் எங்குமே வைக்கப்படவில்லை. மாற்றுப்பாதை குறித்த விவரங்களும் வைக்கப்படவில்லை. ரோடு திடீர் என பிளாக் ஆனவுடன் திகைக்கும் வாகன ஓட்டிகள்.... அங்கிருப்பவர்களிடம் மாற்றுப்பாதை குறித்த விவரங்களை கேட்டு பின் அந்த பாதையில் மாறிச் செல்கின்றனர். இந்த சிக்கலுக்கு விரைவில் தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu