தேனியில் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
தேனியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா பேரவைக்கூட்டம் தேனி சிட்கோ சென்டெக்ட் வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆர்.வெள்ளைப்பாண்டியன் தலைமை வகித்தார். த.வீரையா முன்னிலை வகித்தார். கா.உதயசூரியன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச்செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத் தொடக்கி வைத்து பேசினார்.
மாநிலச்செயலாளர் எஸ்.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கோ.விசாகன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டதுணைச்செயலாளர் ப.செல்லன் மாவட்டபொருளாளர் போத்திராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.செந்தில், போடி ராஜா கோவிந்தராஜ் கடமலை ராஜேந்திரன் பங்கேற்று பேசினர். பகத்பாண்டியன் நன்றியுரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தாலுகா செயலாளராக ஆர்.வெள்ளைப்பாண்டியன், துணைச்செயலாளராக த.வீரையா, பொருளாளராக கா.உதயசூரியன், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக வாசிமலை, ஆனந்தகுமார், முத்தையா உட்பட 17 பேர் கொண்ட தாலுகாக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேனி நகரின் மையப்பகுதியான எம்.ஜி.ஆர்., நகர், சமதர்மபுரம், என்.ஆர்.டி., நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை சர்வே செய்து, அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தேனி பெரியகுளம் ரோட்டில் நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதை திட்டம் அமல்படுத்த வேண்டும். பெரியகுளம் ரோட்டில் வாகன பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும்.
தேனியில் மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் மந்த நிலையில் நடக்கின்றன. இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. குறிப்பாக ரயில்வே கேட் போடப்பட்ட நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியவில்லை. கடுமையான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண ரயில்வே மேம்பால பணிகளை விரைவு படுத்தி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu